Friday, July 31, 2015

விண்டோஸ் 10 இலவச அப்டேட்

விண்டோஸ் 7 & 8.1 ஓ.எஸ் உள்ள கம்பியூட்டர் மற்றும் லேப்டாப்களுக்கு இலவசமாக விண்டோஸ்10 அப்டேட்-ஐ மைக்ரோஸாப்ட் நிறுவனம் வழங்குகிறது. இது முற்றிலும் இலவசம். நீங்கள் உங்கள் ஓ.எஸ்-ஐ அவ்வப்போது அப்டேட் செய்திருந்தால், உங்கள் கம்பியூட்டரில் விண்டோஸ்10 அப்டேட் செய்ய மானிட்டர் ஸ்கிரீனில் கீழ் பக்கம் டாஸ்க் பாரில் விண்டோஸ் சிம்பல் வந்துவிடும். கீழே உள்ள ஸ்கிரீன் ஷாட்-ஐ பார்க்கவும்.


இதில் டாஸ்க் பாரில் விண்டோஸ் சிம்பல் அம்பு குறி போட்டு காட்டப்பட்டுள்ளது. இதை கிளிக் செய்தால் ஸ்கிரீன் தோன்றும். அதில் ரிஸர்வ் அப்டேட் என ஒரு அறிவிப்பு இருக்கும். அதை கிளிக் செய்தால் போதும்.  உங்கள் கம்பியூட்டர் அப்டேட்டுக்கு ரெடியாகும்.

அதன் பின் மேற்படி டாஸ்க்பார் ஐகானை கிளிக் செய்தால் கீழே உள்ள ஸ்கிரீன் தோன்றும். அதில் Reservation Confirmed என முதலில் இருக்கும். அடுத்து Download என இருக்கும். டவுன்லோடு ஆக ஆரம்பித்து விட்டால் In progress  என காட்டும்.




 View download progress என்பதை கிளிக் செய்தால் கீழே காட்டப்பட்டுள்ள ஸ்கிரீன் தோன்றும். அதில் அப்டேட்  விபரம் தெரியும். இனி நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் கம்பியூட்டரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது மறு பக்கம் அது டவுன்லோடு ஆகிக்கொண்டிருக்கும். முழுமையாக டவுன்லோடு ஆனவுடன், அப்டேட் செய்ய உங்களின் அனுமதி கேட்கும்.


ஓகே கொடுத்தால் அப்டேட் ஆகி விண்டோஸ் 10 ஆக மாறிவிடும்.

 என் கம்பியூட்டரில் (லேப்டாப்) இப்பொழுது  டவுன்லோடு ஆகி கொண்டிருக்கிறது. அதன் ஸ்கிரீன் ஷாட் தான் இங்கே காட்டப்பட்டுள்ளது. மொத்தம் அளவு 2699 எம்.பி ஆகும்.  இது முழுமையாக டவுன்லோடு ஆக , இண்டெர்நெட் ஸ்பீடை பொறுத்து நேரம் எடுக்கும். குறைந்த பட்சம் 20 மணி நேரம் எடுக்கும் என நினைக்கிறேன்.




Thursday, July 30, 2015

சூரிய ஒளி மின்சாரம் - புத்தக வடிவம். பகுதி 3



சீரியஸ் (SERIES) இணைப்பு

சீரிஸ் இணைப்பு,  பேரல்லல் இணைப்பு என்பது டி.சி மற்றும் ஏசி மின்சாரம் இவை இரண்டுக்குமே பொதுவானது. முதலில் சீரிஸ் இணைப்பை பற்றி பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பேட்டரி அல்லது பல்பு போன்றவற்றை தொடராக இணைத்தால் அது சீரிஸ் அல்லது தொடர் இணைப்பாகும். மூன்று பேட்டரிகளை எப்படி சீரிஸ் முறையில் இணைப்பது என்பதையும், அவ்வாறு இணைக்கும் பொழுது அதன் தன்மை எப்படி மாறுகிறது என்பதையும் பார்ப்போம். இணைப்பு முறையை படம் 5 விளக்குகிறது. மூன்று பாட்டரிகள் (1.5V - 2500mAh) சீர்யஸ் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. முதல் பாட்டரியின் நெகடிவ் முனை இரண்டாவது பாட்டரியின் பாஸிடிவ் முனையிடனும், 2-வது பாட்டரியின் நெகடிவ் முனை 3-வது பாட்டரியின் பாஸிடிவ் முனையிடனும் இணைக்கபபட்டுள்ளது. இப்பொழுது 1-வது பாட்டரியின் பாஸிடிவ் முனையும் 3-வது பாட்டரியின் நெகடிவ் முனையும் எதனுடனும் இணைக்கப்படாமல் உள்ளது இந்த இரு முனைகளின் வழியாக நமக்கு 4.5 வோல்ட்/2500 மில்லி ஆம்பியர் கிடைக்கும். சீரியஸ் முறையில் இணைக்கும் பொழுது அதன் மின் அழுத்தம் மட்டுமே அதிகரிக்கும். அதாவது மூன்று பேட்டரிகளின் மொத்த மின்அழுத்தமாகிய (1.5V + 1.5V + 1.5V = 4.5 V) 4.5V ஆக மாறும். ஆனால் அதன் கரண்ட் (ஆம்பியர்) மாறாது


படம் 5A-ல் மூன்று 6V-1W ஸ்குரு டைப் பல்புகள் சீரிஸ் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. பல்பில் இரு காண்டாக்ட் முனைகள் உண்டு. ஸ்குரு வடிவிலான உலோக கழுத்து பாகம் ஒரு காண்டாக்ட் (C1). கீழ் பக்கம் உள்ள பொட்டு வடிவிலான காண்டாக்ட் (C2) இரண்டாவது காண்டாக்ட் முதல் பல்ப்பின் C1 காண்டாக்ட் இரண்டாவது பல்ப்பின் C2 காண்டாக்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பல்ப்பின் C1 காண்டாக்ட் மூன்றாவது பல்பின் C2 காண்டாக்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.  இது சீரிஸ் இணைப்பு ஆகும். முதல் பல்ப்பின் C2 காண்டாக்ட், மூன்றாவது பல்ப்பின் C1 காண்டாக்ட் ஆகிய இரண்டும் இந்த இணைப்பின் முனைகளாகும்.


பேரல்லெல் (PARALLEL)  இணைப்பு

படம் 6-ல் மூன்று பேட்டரிகள் பேரெலெல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று பாட்டரிகளின் பாஸிடிவ் முனைகள் ஒன்றாகவும் நெகடிவ் முனைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் வழியாக நமக்கு 1.5V/7500 mAh (2500mAh + 2500mAh + 2500 mAh) கிடைக்கும். அதாவது மூன்று பாட்டரிகளின் மொத்த கரண்ட் (ஆம்பியர்) 7500 மில்லி ஆம்பியர் ஆகும்.  சீரியஸில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் அதிகரிக்கும். கரண்ட் (ஆம்பியர்) மாறாது. பேரல்லெல் ஆக இணைக்கும் பொழுது மின் அழுத்தம் அதிகரிக்காது. கரண்ட் (ஆம்பியர்) அதிகரிக்கும்.



எலெக்டிரிகல்சர்கியூட்

பொதுவாக பல்பு அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணத்தை மின் சப்ளையுடன் (அது டிசி மின்சாரமாக இருந்தாலும் சரி அல்லது ஏசி மின்சாரமாக இருந்தாலும் சரிஇணைப்பது சர்கியூட் எனப்படும். உதாரணத்திற்கு கீழே உள்ள படம் – 7ஐ பார்ப்போம். இதில் ஒரு பல்பு சுவிட்ச்சின் வழியாக 230 வோல்ட் ஏசி மின் சப்ளையில் இணைக்கப்பட்டுள்ளது. சுவிட்ச்சை ஆஃப் செய்திருக்கும் பொழுது இது ஓபன் சர்க்கியூட் (OPEN CIRCUIT) எனவும், சுவிட்ச் ஆன் செய்திருக்கும் பொழுது குளோஸ்டு சர்க்கியூட் (CLOSED CIRCUIT) எனவும் அழைக்கப்படும். பொதுவாக மின்சாதனங்கள் LOAD (டெக்னிக்கலாக) என சொல்லப்படும்.


மீண்டும் சந்திப்போம்................






Wednesday, July 29, 2015

சூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 2



OHMS LAW (ஓம்ஸ்விதி)
இப்பொழுது Ohms's Law  பற்றி தெரிந்துகொள்வோம். அதற்கு முன் கரண்ட், வோல்ட்டேஜ், ரெசிஸ்டன்ஸ் இவற்றின் அடையாள எழுத்து, யூனிட் பெயர், யூனிட்டின் சுருக்கம் போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது


Quantity
Symbol
Unit of measurement
Unit abbreviation
Current
I
Ampere(Amp)
A
Voltage
E or V
Volt
V
Resistance
R
Ohm





E = I R (E= Volt, I = Current, R = Resistance). இதுதான் ஓம்ஸ் விதி. மின்சாரத்துக்கு முதுகுஎலும்பான இந்த விதியை 1827-ல் கண்டுபிடித்தவர் Georg Simon Ohm என்ற ஜெர்மன் விஞ்ஞானி ஆவார். வோல்ட் என்பது கரண்டையும் ரெஸிஸ்டன்ஸ் மதிப்பையும் பெருக்கினால் கிடைப்பதே ஆகும். அதாவது வோல்ட் = கரண்ட் x ரெசிஸ்டன்ஸ். இதன் அடிப்படையில் கிடைத்துள்ள கிழ்கண்ட இரு சூத்திரங்கள் மூலம் கரண்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் இவற்றை கண்டு பிடிக்கலாம்.




படம் 4A – ஐ பார்க்கவும். இது ஒரு எலெக்ட்ரிக்கல் சர்க்கியூட் ஆகும். இதில் ஒரு பல்ப் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரியின் நெகடிவ் முனையில் இருந்து எலெக்ட்ரான்கள் பல்ப்பின் வழியாக பேட்டரியின் பாசிடிவ் முனையை வந்தடைந்து மின்சுற்று பூர்த்தி அடைகிறது. பல்பினுள் இருக்கும் டங்ஸ்டன் (tungsten) எனப்படும் உலோக கம்பியின் வழியாக மின்சாரம் செல்லும் பொழுது அது கொடுக்கும் தடையால் மின்சாரம் அக்கம்பியை சூடு அடைய செய்யும். இதனால் கம்பி பழுப்படைந்து வெளிச்சத்தை கொடுக்கும். உலோகங்களிலேயே டங்ஸ்டன் தான் அதிகபட்ச சூட்டில் உருகும் உலோகமாகும். இதன் உருகுநிலை (Melting point)  3422°C or 6192°F ஆகும். எனவேதான் இந்த உலோககம்பி பல்புகளில் பிலமெண்ட் ஆக உபயோகப்படுத்தப்படுகிறது.



இனி மேலே குறிப்பிட்ட சூத்திரங்களை உபயோகித்து E, I, R இவற்றை கண்டுபிடிப்பதை உதாரணங்கள் மூலம் பார்க்கலாம்.
 

படம் 4B. இதில் பல்ப் ஒன்று 12V பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல்ப் பிலமெண்ட்டின் ரெசிஸ்டன்ஸ் 3 Ω  ஆகும்.  பேட்டரியிலிருந்து பல்ப் எடுக்கும் கரண்ட் எவ்வளவு?  12V ÷ 3 Ω = 4A.

படம் 4C –ல் 36 வோல்ட் பேட்டரியில் ஒரு பல்ப் இணைக்கப்பட்டுள்ளது. பல்ப் 4A கரண்ட்டை எடுக்கிறது. அப்படியென்றால் பல்ப்பின் ரெசிஸ்டன்ஸ் எவ்வளவு?  36V ÷ 4A.  =  9Ω






படம் 4Dஐபார்க்கவும். இந்த சர்க்கியூட்டில் 7 ஓம்ஸ் ரெசிஸ்டன்ஸ் உள்ள பல்பு ஒன்று பாட்டரியுடன் இணக்கப்பட்டுள்ளது. அது 2A கரண்டை எடுக்கிறது. அப்படியென்றால் இணக்கப்பட்டுள்ள பேட்டரியின் வோல்ட் எவ்வளவு? 2A x 7Ω.  = 14V




மேலே கூறிய மூன்று சூத்திரங்களையும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஓம்ஸ் லா டிரைஆங்கிள் (OHMS LAW TRIANGLE) –ஐ புரிந்து கொண்டால் போதும். படத்திலேயே விளக்கம் இருப்பதால் தனியாக விளக்கம் தேவையில்லை.





பவர்(வாட்ஸ்)


பவர்(வாட்ஸ்)
இனி மின் சக்தி பற்றி விரிவாக பார்க்கலாம். ஒரு எலெக்ட்ரிக்கல் சர்க்கியூட்டில் உற்பத்தியாகும் அல்லது அதனால் எடுக்கப்படும் மின்சக்தி இவைதான் பவர் அல்லது சக்தி என சொல்லப்படும். அதாவது ஒரு சர்க்கியூட்டில் இணைக்கப்பட்டுள்ள லோடின் வழியாக மின்சாரம் செல்லும் பொழுது அது சூடு, வெளிச்சம், இயந்திர சக்தி என லோடை பொறுத்து மாறுகிறது. இது பவர் என அழைக்கப்படும். இது வாட்ஸ் என்ற அளவீட்டின் படி அளவிடப்படும்.  ஓம்ஸ் விதியின் அடிப்படையில் வாட்ஸ் என்பது மின்னழுத்தம் மற்றும்
கரண்ட் இவற்றின் பெருக்குத்தொகையே ஆகும். அதாவது P (W) = V x I (A) ஆகும். கிழே பவர்டிரை ஆங்கிள்ன் படம் 4F கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது வாட், வோல்ட், ஆம்பியர் இவற்றில் ஏதாவது இரண்டு தெரிந்திருந்தால் மூன்றாவதை கண்டுபிடித்து விட முடியும். 100 வாட்ஸ் பல்ப்பையே இங்கு எடுத்துக்கொண்டு ஓம்ஸ்விதியை உபயோகித்து பல்பு எடுக்கும் கரண்டை கண்டுபிடிப்போம். W = V x A.  100W = 230V x A. 100 = 230A. A = 100 ÷ 230.  = 0.434A
மின் ஆற்றல் (Electrcal Energy) = சக்தி (Power) × காலம் (Time)
ஒரு வினாடி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய தேவைப்படும் மின் ஆற்றலின் அளவே Joule  எனப்படும்.
1Joule/sec = 1Watt.
Electrical Energy = Power x Time
உதாரணத்திற்கு 100 வாட்ஸ் பல்பு பத்து மணி நேரம் எரிவதாக வைத்து கொள்வோம். இதற்கு எவ்வளவு மின் ஆற்றல் தேவை?
100W × 60 seconds × 60 mintues x 10 hours
=3600000 jules or Watt per second. அல்லது 1 Kilowatt-hour (1000 Watts-Hour)
1 Kilowatt-hour (1000 Watts-Hour) என்பது ஒரு யூனிட் மின்சாரம் ஆகும்.
அதாவது 1000 வாட்ஸ் சாதனத்தை ஒரு மணி நேரம் உபயோகித்தால் ஒரு யூனிட்.
500 வாட்ஸ் பல்ப் இரண்டு மணி நேரம் எரிந்தால் ஒரு யூனிட்.
யூனிட் = Watts÷ 1000
மின்சார மோட்டார்களின் பவர், பெரும்பாலும் ஹார்ஸ் பவரில் (குதிரை சக்தி - HP) குறிப்பிடப்படும். 1 hp என்பது 746 வாட்ஸ் ஆகும்.
 தொடரும்......