Wednesday, July 29, 2015

சூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 2



OHMS LAW (ஓம்ஸ்விதி)
இப்பொழுது Ohms's Law  பற்றி தெரிந்துகொள்வோம். அதற்கு முன் கரண்ட், வோல்ட்டேஜ், ரெசிஸ்டன்ஸ் இவற்றின் அடையாள எழுத்து, யூனிட் பெயர், யூனிட்டின் சுருக்கம் போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது


Quantity
Symbol
Unit of measurement
Unit abbreviation
Current
I
Ampere(Amp)
A
Voltage
E or V
Volt
V
Resistance
R
Ohm





E = I R (E= Volt, I = Current, R = Resistance). இதுதான் ஓம்ஸ் விதி. மின்சாரத்துக்கு முதுகுஎலும்பான இந்த விதியை 1827-ல் கண்டுபிடித்தவர் Georg Simon Ohm என்ற ஜெர்மன் விஞ்ஞானி ஆவார். வோல்ட் என்பது கரண்டையும் ரெஸிஸ்டன்ஸ் மதிப்பையும் பெருக்கினால் கிடைப்பதே ஆகும். அதாவது வோல்ட் = கரண்ட் x ரெசிஸ்டன்ஸ். இதன் அடிப்படையில் கிடைத்துள்ள கிழ்கண்ட இரு சூத்திரங்கள் மூலம் கரண்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் இவற்றை கண்டு பிடிக்கலாம்.




படம் 4A – ஐ பார்க்கவும். இது ஒரு எலெக்ட்ரிக்கல் சர்க்கியூட் ஆகும். இதில் ஒரு பல்ப் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரியின் நெகடிவ் முனையில் இருந்து எலெக்ட்ரான்கள் பல்ப்பின் வழியாக பேட்டரியின் பாசிடிவ் முனையை வந்தடைந்து மின்சுற்று பூர்த்தி அடைகிறது. பல்பினுள் இருக்கும் டங்ஸ்டன் (tungsten) எனப்படும் உலோக கம்பியின் வழியாக மின்சாரம் செல்லும் பொழுது அது கொடுக்கும் தடையால் மின்சாரம் அக்கம்பியை சூடு அடைய செய்யும். இதனால் கம்பி பழுப்படைந்து வெளிச்சத்தை கொடுக்கும். உலோகங்களிலேயே டங்ஸ்டன் தான் அதிகபட்ச சூட்டில் உருகும் உலோகமாகும். இதன் உருகுநிலை (Melting point)  3422°C or 6192°F ஆகும். எனவேதான் இந்த உலோககம்பி பல்புகளில் பிலமெண்ட் ஆக உபயோகப்படுத்தப்படுகிறது.



இனி மேலே குறிப்பிட்ட சூத்திரங்களை உபயோகித்து E, I, R இவற்றை கண்டுபிடிப்பதை உதாரணங்கள் மூலம் பார்க்கலாம்.
 

படம் 4B. இதில் பல்ப் ஒன்று 12V பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல்ப் பிலமெண்ட்டின் ரெசிஸ்டன்ஸ் 3 Ω  ஆகும்.  பேட்டரியிலிருந்து பல்ப் எடுக்கும் கரண்ட் எவ்வளவு?  12V ÷ 3 Ω = 4A.

படம் 4C –ல் 36 வோல்ட் பேட்டரியில் ஒரு பல்ப் இணைக்கப்பட்டுள்ளது. பல்ப் 4A கரண்ட்டை எடுக்கிறது. அப்படியென்றால் பல்ப்பின் ரெசிஸ்டன்ஸ் எவ்வளவு?  36V ÷ 4A.  =  9Ω






படம் 4Dஐபார்க்கவும். இந்த சர்க்கியூட்டில் 7 ஓம்ஸ் ரெசிஸ்டன்ஸ் உள்ள பல்பு ஒன்று பாட்டரியுடன் இணக்கப்பட்டுள்ளது. அது 2A கரண்டை எடுக்கிறது. அப்படியென்றால் இணக்கப்பட்டுள்ள பேட்டரியின் வோல்ட் எவ்வளவு? 2A x 7Ω.  = 14V




மேலே கூறிய மூன்று சூத்திரங்களையும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஓம்ஸ் லா டிரைஆங்கிள் (OHMS LAW TRIANGLE) –ஐ புரிந்து கொண்டால் போதும். படத்திலேயே விளக்கம் இருப்பதால் தனியாக விளக்கம் தேவையில்லை.





பவர்(வாட்ஸ்)


பவர்(வாட்ஸ்)
இனி மின் சக்தி பற்றி விரிவாக பார்க்கலாம். ஒரு எலெக்ட்ரிக்கல் சர்க்கியூட்டில் உற்பத்தியாகும் அல்லது அதனால் எடுக்கப்படும் மின்சக்தி இவைதான் பவர் அல்லது சக்தி என சொல்லப்படும். அதாவது ஒரு சர்க்கியூட்டில் இணைக்கப்பட்டுள்ள லோடின் வழியாக மின்சாரம் செல்லும் பொழுது அது சூடு, வெளிச்சம், இயந்திர சக்தி என லோடை பொறுத்து மாறுகிறது. இது பவர் என அழைக்கப்படும். இது வாட்ஸ் என்ற அளவீட்டின் படி அளவிடப்படும்.  ஓம்ஸ் விதியின் அடிப்படையில் வாட்ஸ் என்பது மின்னழுத்தம் மற்றும்
கரண்ட் இவற்றின் பெருக்குத்தொகையே ஆகும். அதாவது P (W) = V x I (A) ஆகும். கிழே பவர்டிரை ஆங்கிள்ன் படம் 4F கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது வாட், வோல்ட், ஆம்பியர் இவற்றில் ஏதாவது இரண்டு தெரிந்திருந்தால் மூன்றாவதை கண்டுபிடித்து விட முடியும். 100 வாட்ஸ் பல்ப்பையே இங்கு எடுத்துக்கொண்டு ஓம்ஸ்விதியை உபயோகித்து பல்பு எடுக்கும் கரண்டை கண்டுபிடிப்போம். W = V x A.  100W = 230V x A. 100 = 230A. A = 100 ÷ 230.  = 0.434A
மின் ஆற்றல் (Electrcal Energy) = சக்தி (Power) × காலம் (Time)
ஒரு வினாடி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய தேவைப்படும் மின் ஆற்றலின் அளவே Joule  எனப்படும்.
1Joule/sec = 1Watt.
Electrical Energy = Power x Time
உதாரணத்திற்கு 100 வாட்ஸ் பல்பு பத்து மணி நேரம் எரிவதாக வைத்து கொள்வோம். இதற்கு எவ்வளவு மின் ஆற்றல் தேவை?
100W × 60 seconds × 60 mintues x 10 hours
=3600000 jules or Watt per second. அல்லது 1 Kilowatt-hour (1000 Watts-Hour)
1 Kilowatt-hour (1000 Watts-Hour) என்பது ஒரு யூனிட் மின்சாரம் ஆகும்.
அதாவது 1000 வாட்ஸ் சாதனத்தை ஒரு மணி நேரம் உபயோகித்தால் ஒரு யூனிட்.
500 வாட்ஸ் பல்ப் இரண்டு மணி நேரம் எரிந்தால் ஒரு யூனிட்.
யூனிட் = Watts÷ 1000
மின்சார மோட்டார்களின் பவர், பெரும்பாலும் ஹார்ஸ் பவரில் (குதிரை சக்தி - HP) குறிப்பிடப்படும். 1 hp என்பது 746 வாட்ஸ் ஆகும்.
 தொடரும்......


No comments:

Post a Comment