Thursday, July 30, 2015

சூரிய ஒளி மின்சாரம் - புத்தக வடிவம். பகுதி 3



சீரியஸ் (SERIES) இணைப்பு

சீரிஸ் இணைப்பு,  பேரல்லல் இணைப்பு என்பது டி.சி மற்றும் ஏசி மின்சாரம் இவை இரண்டுக்குமே பொதுவானது. முதலில் சீரிஸ் இணைப்பை பற்றி பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பேட்டரி அல்லது பல்பு போன்றவற்றை தொடராக இணைத்தால் அது சீரிஸ் அல்லது தொடர் இணைப்பாகும். மூன்று பேட்டரிகளை எப்படி சீரிஸ் முறையில் இணைப்பது என்பதையும், அவ்வாறு இணைக்கும் பொழுது அதன் தன்மை எப்படி மாறுகிறது என்பதையும் பார்ப்போம். இணைப்பு முறையை படம் 5 விளக்குகிறது. மூன்று பாட்டரிகள் (1.5V - 2500mAh) சீர்யஸ் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. முதல் பாட்டரியின் நெகடிவ் முனை இரண்டாவது பாட்டரியின் பாஸிடிவ் முனையிடனும், 2-வது பாட்டரியின் நெகடிவ் முனை 3-வது பாட்டரியின் பாஸிடிவ் முனையிடனும் இணைக்கபபட்டுள்ளது. இப்பொழுது 1-வது பாட்டரியின் பாஸிடிவ் முனையும் 3-வது பாட்டரியின் நெகடிவ் முனையும் எதனுடனும் இணைக்கப்படாமல் உள்ளது இந்த இரு முனைகளின் வழியாக நமக்கு 4.5 வோல்ட்/2500 மில்லி ஆம்பியர் கிடைக்கும். சீரியஸ் முறையில் இணைக்கும் பொழுது அதன் மின் அழுத்தம் மட்டுமே அதிகரிக்கும். அதாவது மூன்று பேட்டரிகளின் மொத்த மின்அழுத்தமாகிய (1.5V + 1.5V + 1.5V = 4.5 V) 4.5V ஆக மாறும். ஆனால் அதன் கரண்ட் (ஆம்பியர்) மாறாது


படம் 5A-ல் மூன்று 6V-1W ஸ்குரு டைப் பல்புகள் சீரிஸ் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. பல்பில் இரு காண்டாக்ட் முனைகள் உண்டு. ஸ்குரு வடிவிலான உலோக கழுத்து பாகம் ஒரு காண்டாக்ட் (C1). கீழ் பக்கம் உள்ள பொட்டு வடிவிலான காண்டாக்ட் (C2) இரண்டாவது காண்டாக்ட் முதல் பல்ப்பின் C1 காண்டாக்ட் இரண்டாவது பல்ப்பின் C2 காண்டாக்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பல்ப்பின் C1 காண்டாக்ட் மூன்றாவது பல்பின் C2 காண்டாக்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.  இது சீரிஸ் இணைப்பு ஆகும். முதல் பல்ப்பின் C2 காண்டாக்ட், மூன்றாவது பல்ப்பின் C1 காண்டாக்ட் ஆகிய இரண்டும் இந்த இணைப்பின் முனைகளாகும்.


பேரல்லெல் (PARALLEL)  இணைப்பு

படம் 6-ல் மூன்று பேட்டரிகள் பேரெலெல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று பாட்டரிகளின் பாஸிடிவ் முனைகள் ஒன்றாகவும் நெகடிவ் முனைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் வழியாக நமக்கு 1.5V/7500 mAh (2500mAh + 2500mAh + 2500 mAh) கிடைக்கும். அதாவது மூன்று பாட்டரிகளின் மொத்த கரண்ட் (ஆம்பியர்) 7500 மில்லி ஆம்பியர் ஆகும்.  சீரியஸில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் அதிகரிக்கும். கரண்ட் (ஆம்பியர்) மாறாது. பேரல்லெல் ஆக இணைக்கும் பொழுது மின் அழுத்தம் அதிகரிக்காது. கரண்ட் (ஆம்பியர்) அதிகரிக்கும்.



எலெக்டிரிகல்சர்கியூட்

பொதுவாக பல்பு அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணத்தை மின் சப்ளையுடன் (அது டிசி மின்சாரமாக இருந்தாலும் சரி அல்லது ஏசி மின்சாரமாக இருந்தாலும் சரிஇணைப்பது சர்கியூட் எனப்படும். உதாரணத்திற்கு கீழே உள்ள படம் – 7ஐ பார்ப்போம். இதில் ஒரு பல்பு சுவிட்ச்சின் வழியாக 230 வோல்ட் ஏசி மின் சப்ளையில் இணைக்கப்பட்டுள்ளது. சுவிட்ச்சை ஆஃப் செய்திருக்கும் பொழுது இது ஓபன் சர்க்கியூட் (OPEN CIRCUIT) எனவும், சுவிட்ச் ஆன் செய்திருக்கும் பொழுது குளோஸ்டு சர்க்கியூட் (CLOSED CIRCUIT) எனவும் அழைக்கப்படும். பொதுவாக மின்சாதனங்கள் LOAD (டெக்னிக்கலாக) என சொல்லப்படும்.


மீண்டும் சந்திப்போம்................






1 comment:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete