Friday, August 28, 2015

நான் வேலை வெட்டி இல்லாதவன்சுபமுகூர்த்த நாளான 17-7-2015 வெள்ளிக்கிழமையன்று  என்னுடைய ரேஷன் கடைக்கு  பொருட்கள் வாங்க சென்றேன். துவரம் பருப்பு ( கனடியன் எல்லோ லெண்டில்)  பூசனம் பூத்து கட்டிகட்டியாக இருந்தது. அதனால் துவரம் பருப்பு வாங்கவில்லை. சர்க்கரை, உழுத்தம் பருப்பு போன்றவற்றை வாங்கினேன். வாங்கிய பொருளுக்கு பில் கிளார்க் பில் பில் கொடுத்தார். அதை வாங்கி வைத்துக்கொண்டு எடைபோடுபவர் பொருளை கொடுத்தார். பொருள் வாங்கிய நமக்கு பில் தரவேண்டுமல்லவா? தரவில்லை.

சென்னையை பொறுத்த வரை நியாய விலை கடைகளில் விற்கப்படும் தரம் அளவு பற்றி புகார் செய்ய சம்பந்தப்பட்ட மண்டலத்தின் சிவில் சப்ளை இலாகாவின் உதவி ஆணையர் அல்லது சிவில் சப்ளை கார்ப்பொரேஷனின் வடக்கு பிராந்திய முது நிலை மேலாளருக்கு புகார் செய்ய வேண்டும்.  தரமற்ற பொருளை சிவில் சப்ளை கார்ப்போரேஷன் சப்ளை செய்திருப்பதால் முது நிலை பிராந்திய மேலாளருக்கு உடனடியாக மின்னஞ்சலில் புகார் அனுப்பினேன்.

பொதுவாக பொருள் தரமற்று இருக்கிறது என புகார் வந்தால், மேற்படி பொருள் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு கடைக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியை அங்கு அனுப்பி தரத்தை பரிசோதிக்க வேண்டும். தரம் சரியில்லை என்றால் அப்பொருளை  கிடங்கிற்கு அனுப்பி மாற்றாக தரமுள்ள பொருளை கடைக்கு அனுப்ப வேண்டும். அப்பொருளை விநியோகத்திற்கு அனுப்பிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட  நடவடிக்கை விபரத்தை புகார் அனுப்பியவருக்கு தெரியப்படுத்தவேண்டும். ஆனால் என்ன நடந்தது?  அதற்கு முன் நான் அவருக்கு அனுப்பிய புகாரை படித்து பாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை கிளிக் செய்து பின் பெரிதாக்கி படிக்கவும்.
Saturday, August 22, 2015

முக்கிய அறிவிப்பு

இந்த பிளாக்கின் பதிவுகளை தமிழ் மணத்தில் இப்பொழுது ஒரு மாத காலமாக  புதுப்பிக்க முடியவில்லை. புதிய பதிவுகள் எதுவும் காணப்படவில்லை என கூறுகிறது. இதானால் கழிந்த நாலைந்து பதிவுகள் தமிழ்மணத்தில் சேரவில்லை. ஆரம்ப காலத்திலிருந்தே பிளாக்கின் பெயர் தெரிவதில்லை. அதனால் புதிதாக “ உண்மையை சொல்லுகிறேன்” என்ற பிளாக்கை உருவாக்கியுள்ளேன். அதில் ஆரம்ப கட்டத்தில் சட்டம் சம்பந்தப்பட்ட பதிவுகளை மட்டும்எழுதப்போகிறேன். எனவே என் பிளாக்கிற்கு வருகை தரும் நண்பர்கள் புதிய பிளாக்கிற்கும் வருகை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த பிளாக்கிலும் பதிவுகளை எழுதுவேன். புதிய பிளாக்கிற்கு செல்ல இதை கிளிக் செய்யவும்.

நன்றி

திரவிய நடராஜன்

Monday, August 17, 2015

விண்டோஸ் 10 கிளீன் இன்ஸ்டால்

இப்பொழுது மைக்ரோஸாப்ட் வெளியிட்டிருக்கும் விண்டோஸ் 10 பதிப்பு, விண்ட்டோஸ் 7 & 8 -ல் உள்ள குறைபாடுகளை நீக்கி சுலபமாக உபயோகிக்கும் வகையில் உள்ளது. ஏற்கனவே விண்டோஸ் 7 அல்லது 8 -ஐ கம்பியூட்டரில் இன்ஸ்டால் செய்திருப்பவர்களுக்கு விண்டோஸ் 10-ஐ இலவசமாக  வழங்குகிறது. நீங்கள் இரண்டு விதத்தில் இதை பெறலாம்.

 நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் விண்டோஸ் 7 அல்லது 8 இன்ஸ்டால் செய்திருந்து எல்லா அப்டேட்டும் இன்ஸ்டால் ஆகியிருந்தால், நீங்கள் முன் பதிவில் குறிப்பிட்டப்படி அப்டேட் அல்லது அப் கிரேடு செய்யலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் உண்டு. குறைந்த பட்சம் 20 மணிநேரம் சிஸ்டத்தை தொடர்ந்து ஆன் செய்திருக்க வேண்டும். ஃபைல் அளவு சுமார் 3 ஜி.பி. இண்டெர்நெட் கணெக்‌ஷன் டிஸ்கனெக்ட் ஆகாமல் இருக்க வேண்டும். இடையில் டிஸ்கனெக்ட் ஆனால் அதுவரை டவுன்லோடு ஆனது அம்பேல்!  நான்விடாமுயற்சி செய்து, இரண்டு முறை தோல்விக்கு பின் மூன்றாம் முறை வெற்றி கிடைத்தது. மூன்று நாட்கள் சிஸ்டத்தை ஆஃப் செய்யாமல் இந்த வேலையை செய்தேன். இது நடை முறைக்கு ஒத்து வராது. 

அடுத்த வழி என்ன வென்றால் மைக்ரோ சாப்ட் வெப்சைட்டுக்கு போய், மீடியா கிரியேஷன் டூலை டவுன்லோடு செய்து அதன் மூலம் அப்கிரேடு ஃபைலை டவுன்லோடு செய்து அப்கிரேடு செய்யலாம். இதுவும் மேலே சொன்ன படிதான்.  இதுவும் வேலைக்கு ஆகாது.

அப்படியே அப்கிரேடு செய்தாலும், ரெக்கவரி சிடி தான் கிரியேட் செய்ய முடியும். அதை கொண்டு  சிஸ்டம் ஃபைலை ரிப்பேர்தான் செய்யமுடியும். கிளீன் இன்ஸ்டால் செய்ய முடியாது.

கிளீன் இன்ஸ்டால் செய்ய விண்டோஸ் 10 பூட்டபிள் சிடி மற்றும் புராடக்ட் கீ தேவை.

இவற்றை கூகிள் ஆண்டவர் துணையால் தேடி கண்டுபிடித்து எனது சிஸ்டத்தில் வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்து விட்டேன்.  பெர்மனெண்ட் ஆக்டிவேஷன். அப்டேட்டும் ஆகிறது. கீழே உள்ள ஸ்கிரீன் ஷாட்டை பார்க்கவும்விண்டோஸ் 10 Pro இன்ஸ்டால் செய்ய விரும்பினால் அதன் ISO Image File -ஐ முதலில் டவுன்லோடு செய்யுங்கள். அதன் லிங் -ஐ கிளிக் செய்யுங்கள். இது டோரண்ட் ஃபைல் ஆகும்.  இந்த ஃபைல்-ன் அளவு 3.8 ஜிபி ஆகும். இதை டவுன்லோடு செய்ய உங்கள் சிஸ்டத்தில் யூ டோரண்ட் அல்லது பிட் டோரண்ட் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

டவுன்லோடு செய்த பின் இந்த ஃபைலை டிவிடி-யில் பூட்டபில் ஆக ஃபர்ன் செய்ய வேண்டும் அல்லது மைக்ரோ சாப்ட் Windows 7 USB/DVD Download Tool-ஐ உபயோகித்து பென் டிரைவில் பூட்டபில் ஆக இன்ஸ்டால் செய்ய வேண்டும். பென் டிரைவ் குறைந்த பட்சம் 5 ஜிபி ஆக இருக்க வேண்டும்.

டோரண்ட் ஃபைலை டவுன்லோடு செய்து பென் டிரைவில் இன்ஸ்டால் செய்வது பற்றி “விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது எப்படி?” என்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அதை படித்து பார்க்கவும். இதை கிளிக் செய்யவும்.  

அடுத்த பதிவில் விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்வது பற்றி விளக்குகிறேன்.


சந்திப்போம்......................Saturday, August 1, 2015

சூரிய ஒளி மின்சாரம் - புத்தக வடிவம். பகுதி 4


பகுதி.2

சோலார் பவர் சிஸ்டம்.


             சோலார் பவர் (Solar Power) எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் நம் மின்சார தேவையை பூர்த்தி செய்ய இயற்கையால் கொடுக்கப்பட்ட அன்பளிப்பு என்றால் மிகையாகாது. உலக நாடுகளிலேயே வருடத்தில் அதிக நாட்கள், ஒவ்வொரு நாளும் அதிக மணி நேரங்கள் சூரிய ஒளி கிடைக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகப்படியான சூரிய ஒளி கிடைக்கிறது. சூரிய ஒளியை சோலார் பேனலின் மீது விழச்செய்து, அதில் உற்பத்தியாகும் டி.சி கரண்டை(DC Current) பேட்டரியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். நமக்கு மின்சாரம் தேவைப்படும் பொழுது டிசி மின்சாரத்தை இன்வெர்ட்டர் எனப்படும் சாதனத்தில் செலுத்தி 230 வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றி உபயோகப்படுத்தலாம்.

சூரிய ஒளியை நமக்கு தேவையான 230 வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றி தரும் அமைப்பை சோலார் பவர் சிஸ்டம் என அழைக்கிறோம். இந்த சிஸ்டத்தில் சோலார் பேனல், சார்ஜ் கண்ட்ரோலர், பாட்டரி, டிசி-ஏசி இன்வெர்ட்டர் ஆகிய நான்கு சாதனங்கள் உண்டு. கீழே உள்ள படம் 8-ஐ பார்க்கவும்.சோலார் பேனலில் உற்பத்தியாகும் டி.சி மின்சாரம் சார்ஜ் கண்ட்ரோலர் வழியாக செல்லும் பொழுது, பேட்டரியை சார்ஜ் செய்ய தேவையான அளவிற்கு அது கட்டுப்படுத்தப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. பேட்டரியிலிருந்து மின்சாரம் இன்வெர்ட்டருக்கு அனுப்பப்பட்டு, நமக்கு தேவைப்படும் 230 வோல்ட் ஏ.சி மின்சாரமாக மாறி வெளி வருகிறது. இனி சோலார் பேனலை பற்றி விரிவாக பார்க்கலாம். சோலார் பேனல், போட்டோவோல்டைக் மாடுல்ஸ் (Photovoltaic modules - PV) எனவும் அழைக்கப்படும். இது பல சோலார் செல்களை ஒன்றாக இணைத்து நமக்கு தேவையான மின் அழுத்தம் மற்றும் சக்தி (Watt) தரக்கூடியதாக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இது சூரிய ஒளி படும்படி வெளிப்புறம் நிரந்தரமாக வைக்கப்படுவதால் மழை, வெயில் மற்றும் தூசி இவைகளினால் பாதிப்படையாதவாறு வடிவமைக்கப்பட்டு இருக்கும். இதன் ஆயுட்காலம் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் என்பதால் நீடித்து உழைக்குமாறுதயார் செய்யப்படுகிறது. சோலார் பேனல்களை பற்றி பின் விரிவாக பார்க்கலாம். 
3.சோலார்செல்(Solar Cell)

சோலார் செல் சிலிகான் எனப்படும் தாது பொருளால் உருவாக்கப்படுகிறது. இது இயற்கையாகவே மணலில் கலந்திருக்கும் பொருளாகும். சோலார் செல் பல அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. அவற்றின் அளவும் சக்தியும் திறனை(EFFICIENCY) பொருத்து சிறிது மாறும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் விழும் சூரிய ஒளியில் ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோ வாட் (1000 வாட்) மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான புரோட்டான் உள்ளது. முழு திறன் அல்லது நூறு சதவிகித திறன் என்பது 1 kW/m2 or 100 mW/cm2ஆகும். அதாவது ஒரு சதுர மீட்டர் பரப்பு கொண்ட சோலார் செல் ஒரு கிலோ வாட் மின்சாரத்தை (அல்லது ஒரு சதுர செண்டி மீட்டர் செல் 100 மில்லி வாட் மின்சாரத்தை) உற்பத்தி செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு 6” x 6” செல்லை எடுத்துக்கொள்வோம். அது 15.6 மி.மீ × 15.6 மி.மீ அளவு கொண்டது. அதன் பரப்பளவு 243.36 (15.6 × 15.6) சதுர செ.மீ. ஓரு சதுர செ.மீட்டருக்கு 100 மில்லி வாட். எனவே இந்த செல் 24.33 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் சராசரியாக நான்கு வாட் உற்பத்தி செய்யும். எனவே இந்த செல்லின் திறன் 16.5% (4 ÷ 24.33 × 100)ஆகும். தற்பொழுது தயாரிக்கப்படும் செல்களின் திறன் அதிக பட்சம் ± 22.5% ஆகும். பரப்பளவுகளுக்கு ஏற்ப அதன் சக்தி (power) இருக்கும். ஆனால் அவற்றின் மின் அழுத்தம் (volt) மாறாது. அது ± 0.5 வோல்ட்டாகவே இருக்கும். உதாரணத்திற்கு மாறுபட்ட அளவுகள் கொண்ட செல்லை எடுத்துக்கொள்வோம். 6” x 6” அளவுள்ளசெல், உத்தேசமாக 4 வாட்சக்திகொண்டது. அதன் மின்அழுத்தம் ± 0.5V ஆகும். 6”× 3” அளவு உள்ள செல்லின் சக்தி ± 2 வாட்ஆகும். அதன் மின்அழுத்தம் ± 0.5V ஆகும்.

சோலார் செல்லின் வெளித்தோற்றம் எப்படி இருக்கும் என்பதை படம்-9 காட்டுகிறது. மல்டி பஸ்பார் டெக்னாலஜியின் படி 2 பஸ் பார் (BUS BAR)மாடல், 3 பஸ் பார்செல்கள் தயாரிக்கப்படுகிறது. படத்தில் காட்டப்பட்டிருக்கும் 3 பஸ் பார் செல்லின் அளவு 6” x 6” ஆகும். முதலில் உள்ளது செல்லின் முன் பக்க தோற்றத்தையும், அடுத்து உள்ளது செல்லின் பின் பக்க தோற்றத்தையும் காட்டுகிறது. முன்பக்கத்தில் 3 வெள்ளை நிற கோடுகள் இருக்கிறது. இது உலோகத்திலான நெகடிவ் முனையாகும். இது பஸ்பார் என அழைக்கப்படும். பின் பக்கத்தில் மூன்று பாசிடிவ் பஸ் பார்கள் உள்ளது. சில கம்பெனிகள் பின் பக்கத்தில் வரிசையாக சதுர வடிவிலான உலோக தகடுகளை பொருத்தியிருப்பார்கள். இவற்றை டேப்பிங் வயர் மூலம் பஸ்பாராக இணைக்க வேண்டும். இது உலோகத்திலான பாசிடிவ் முனைகளாகும்.சோலார் செல்கள் 156mmx156mm (6” x 6”), 130mmx130mm (5” x 5”), 110mmx110mm (4.3” x  4.3”) என்ற அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. சோலார் செல் மோனோ கிரிஸ்டலைன், பாலிகிரிஸ்டலைன் என இரு வகைப்படும். அடிப்படையில் இவற்றின் செயல்பாடுகள் ஒன்றாக இருந்தாலும் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதில் மோனோ கிரிஸ்டலைன் செல்கள் பாலிகிரிஸ்டலைன் செல்களை விட சிறிது சக்தி அதிகமானவை. 
சோலார் செல்கள் பல அடுக்குகளை கொண்டது. சோலார் செல்லில் கரு நிற ஊதா அல்லது கருப்பு நிறத்தில் உள்ளது முன்பக்கம் ஆகும். படம் – 10 ஐபார்க்கவும்.

 

இதன் மேற்பரப்பில் Anti-Reflection Coat பூசப்பட்டிருக்கும். இது சோலார் செல்லின் மீது விழும் சூரிய ஒளி கதிர்களை சிதற விடாமல் உட்புறம் அனுப்பும். இதன் கீழ் பக்கம் வரிசையாக Negative contact (electrode), Negative Type Semiconductor, Positive Type Semiconductor, Positive contact (electrode)என அடுக்குகளாக இருக்கும். பாசிடிவ் எலெக்ரோடு என்பதை பாசிடிவ் முனை எனவும், நெகடிவ் எலெக்ரோடு என்பதை நெகடிவ் முனை என்ற அளவிற்கு இந்த இரண்டை மட்டும் நாம் புரிந்து கொண்டால் போதும். இது செயல்படும் முறையை பார்க்கலாம். சோலார் செல்லின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் பொழுது, ஆண்டி ரிப்ளெக்சன் பூச்சானது அதை சிதற விடாமல் உள்ளே அனுப்பும். அவ்விதம் அனுப்பப்படும் கதிர்கள் உள்ளே சென்று டிசி மின்சாரமாக மாறி நெகடிவ் எலெக்ரோடு மூலம் நெகடிவ், பாசிடிவ் எலெக்ரோடு மூலம் பாசிடிவ் என வெளிவரும். சோலார் செல்கள் அனைத்தும்± 0.5V மின் அழுத்தம் உடையதாக இருக்கும்.

நமக்கு தேவையான சக்தி மற்றும் மின் அழுத்தம் கிடைக்கும் வகையில் எப்படி பல சோலார் செல்களை இணைப்பது என்பதை பார்க்கலாம். ஏற்கனவே நாம் ஓம்ஸ் விதியின் பிரகாரம் (OHMS LAW) சோலார் செல்களை பேரலில் இணைத்தால் அதன் ஆம்பியர், மொத்த சோலார் செல்களுடைய கரண்ட்டின் (ஆம்பியரின்) கூட்டு தொகையாக மாறும். பல சோலார் செல்களை சீரியஸ்-ல் இணைத்தால் அதனுடைய வோல்ட், மொத்த சோலார் செல்களின் மின் அழுத்தத்தின் கூட்டுத் தொகையாக மாறும் என்பதை அறிந்து உள்ளோம்.

நமக்கு 12 வோல்ட் சோலார் பேனல் தேவை என வைத்து கொள்வோம். ஒரு செல்லின் மின்அழுத்தம் 0.5V என பார்த்தோம். ஆனால் அது பகல் நேரம் முழுவதும் 0.5 வோல்ட்டாக இருக்காது. நல்ல பிரகாசமான சூரிய ஒளியில் 0.5V –க்கு அதிகமாகவும் சூரிய ஒளி குறைவாக இருக்கும் பொழுது 0.5 வோல்ட்டுக்கு குறைவாகவும் இருக்கும். 24 செல்களை சீரியஸ்-ல் இணைத்தால் அது 12V மின் அழுத்தத்தை தர வேண்டும். மேலே கூறப்பட்ட காரணத்தால் குறைவாகவே இருக்கும். எனவே 36 செல்கள் சீரியஸ்-ல் இணைக்கப்படும். எந்த விதமான லோடும்(LOAD) இணைக்கப்படாத நிலையில் 21 வோல்ட் ஆக இருக்கும். இது OPEN CIRCUIT VOLTAGE என சொல்லப்படும். அதிகபட்ச சூரிய ஒளி விழும் பொழுது இது 17 வோல்ட்டாக இருக்கும். சூரிய வெளிச்சம் குறையும் பொழுதும், லோடு எனப்படும் பேட்டரியை இணைக்கும் பொழுதும் மேலும் குறையும். எனவே 12 வோல்ட் பேனலுக்கு 36 செல்கள் இணைக்கப்படுகிறது. 36 செல்களை சீரிஸ்சில் இணைக்கும் பொழுது ஓபன் சர்கியூட் வோல்ட்டேஜ் உத்தேசமாக 21 வோல்ட் ஆகவும், அதிகபட்ச பவரை (வாட்) தரும்பொழுது (Votagae at Maximum Power) 17 வோல்ட் ஆக இருக்கும். கீழே 5”x5” அளவுள்ள செல்லின் விபரங்களை கீழே கொடுத்துள்ளேன். இது செல் உற்பத்தி செய்யும் நிறுவனம் கொடுத்துள்ள விபரங்கள் ஆகும்.

Specifcation:
Open circuit voltage (Voc): 0.604 - 0.623 V.
Close circuit current Isc: 4.881 - 5.300 A
Maximum power voltage (Vmax): 0.473 - 0.528 V
Maximum power current (Imax): 4.429 - 4.924 A
Power: 2.1-2.6 watts Efficiency: 14% - 17.5%
Dimension: 125 mm X 125 mm, or 5X5 In.
இதில் அடிக்கோடிட்ட “ Maximum power voltage V max: 0.473 - 0.528 V ”என்பதை பார்க்கவும். இதன் பொருள் என்னவென்றால், அதிகபட்சமாக பவரை கொடுக்கும் பொழுது 0.473 வோல்ட் முதல் 0.5.28 வோல்ட் வரை செல்லின் மின்அழுத்தம் இருக்கும். அதைப்போலவே அதனுடைய திறன் 2.1 வாட்ஸ் – 2.6 வாட்ஸாக இருக்கும் என்பதாகும். இந்த செல்களை பயன்படுத்தி 36 செல்கள் கொண்ட பேனல் தயாரிப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் Vmax = 36×(0.473-0.528)V = 17.028V-19.008V. Voc= 36×(0.604 – 0.623)V = 21.744V – 22.428V


மீண்டும் சந்திப்போம்.........