Monday, August 17, 2015

விண்டோஸ் 10 கிளீன் இன்ஸ்டால்

இப்பொழுது மைக்ரோஸாப்ட் வெளியிட்டிருக்கும் விண்டோஸ் 10 பதிப்பு, விண்ட்டோஸ் 7 & 8 -ல் உள்ள குறைபாடுகளை நீக்கி சுலபமாக உபயோகிக்கும் வகையில் உள்ளது. ஏற்கனவே விண்டோஸ் 7 அல்லது 8 -ஐ கம்பியூட்டரில் இன்ஸ்டால் செய்திருப்பவர்களுக்கு விண்டோஸ் 10-ஐ இலவசமாக  வழங்குகிறது. நீங்கள் இரண்டு விதத்தில் இதை பெறலாம்.

 நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் விண்டோஸ் 7 அல்லது 8 இன்ஸ்டால் செய்திருந்து எல்லா அப்டேட்டும் இன்ஸ்டால் ஆகியிருந்தால், நீங்கள் முன் பதிவில் குறிப்பிட்டப்படி அப்டேட் அல்லது அப் கிரேடு செய்யலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் உண்டு. குறைந்த பட்சம் 20 மணிநேரம் சிஸ்டத்தை தொடர்ந்து ஆன் செய்திருக்க வேண்டும். ஃபைல் அளவு சுமார் 3 ஜி.பி. இண்டெர்நெட் கணெக்‌ஷன் டிஸ்கனெக்ட் ஆகாமல் இருக்க வேண்டும். இடையில் டிஸ்கனெக்ட் ஆனால் அதுவரை டவுன்லோடு ஆனது அம்பேல்!  நான்விடாமுயற்சி செய்து, இரண்டு முறை தோல்விக்கு பின் மூன்றாம் முறை வெற்றி கிடைத்தது. மூன்று நாட்கள் சிஸ்டத்தை ஆஃப் செய்யாமல் இந்த வேலையை செய்தேன். இது நடை முறைக்கு ஒத்து வராது. 

அடுத்த வழி என்ன வென்றால் மைக்ரோ சாப்ட் வெப்சைட்டுக்கு போய், மீடியா கிரியேஷன் டூலை டவுன்லோடு செய்து அதன் மூலம் அப்கிரேடு ஃபைலை டவுன்லோடு செய்து அப்கிரேடு செய்யலாம். இதுவும் மேலே சொன்ன படிதான்.  இதுவும் வேலைக்கு ஆகாது.

அப்படியே அப்கிரேடு செய்தாலும், ரெக்கவரி சிடி தான் கிரியேட் செய்ய முடியும். அதை கொண்டு  சிஸ்டம் ஃபைலை ரிப்பேர்தான் செய்யமுடியும். கிளீன் இன்ஸ்டால் செய்ய முடியாது.

கிளீன் இன்ஸ்டால் செய்ய விண்டோஸ் 10 பூட்டபிள் சிடி மற்றும் புராடக்ட் கீ தேவை.

இவற்றை கூகிள் ஆண்டவர் துணையால் தேடி கண்டுபிடித்து எனது சிஸ்டத்தில் வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்து விட்டேன்.  பெர்மனெண்ட் ஆக்டிவேஷன். அப்டேட்டும் ஆகிறது. கீழே உள்ள ஸ்கிரீன் ஷாட்டை பார்க்கவும்



விண்டோஸ் 10 Pro இன்ஸ்டால் செய்ய விரும்பினால் அதன் ISO Image File -ஐ முதலில் டவுன்லோடு செய்யுங்கள். அதன் லிங் -ஐ கிளிக் செய்யுங்கள். இது டோரண்ட் ஃபைல் ஆகும்.  இந்த ஃபைல்-ன் அளவு 3.8 ஜிபி ஆகும். இதை டவுன்லோடு செய்ய உங்கள் சிஸ்டத்தில் யூ டோரண்ட் அல்லது பிட் டோரண்ட் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

டவுன்லோடு செய்த பின் இந்த ஃபைலை டிவிடி-யில் பூட்டபில் ஆக ஃபர்ன் செய்ய வேண்டும் அல்லது மைக்ரோ சாப்ட் Windows 7 USB/DVD Download Tool-ஐ உபயோகித்து பென் டிரைவில் பூட்டபில் ஆக இன்ஸ்டால் செய்ய வேண்டும். பென் டிரைவ் குறைந்த பட்சம் 5 ஜிபி ஆக இருக்க வேண்டும்.

டோரண்ட் ஃபைலை டவுன்லோடு செய்து பென் டிரைவில் இன்ஸ்டால் செய்வது பற்றி “விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது எப்படி?” என்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அதை படித்து பார்க்கவும். இதை கிளிக் செய்யவும்.  

அடுத்த பதிவில் விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்வது பற்றி விளக்குகிறேன்.


சந்திப்போம்......................



2 comments:

  1. நன்றி நண்பரே தாங்கள் சொன்ன படி டவுன்லோட் செய்து வைத்துள்ளேன் எப்படி இன்ஸ்டால் செய்வது விளக்கவும்

    ReplyDelete
  2. ISO file இனை WinRAR மூலம் extract செய்து setup இணை இயக்கலாமே. இது cd or bootable usb ஐ விட இலகுவானது ..

    ReplyDelete