Friday, August 28, 2015

நான் வேலை வெட்டி இல்லாதவன்



சுபமுகூர்த்த நாளான 17-7-2015 வெள்ளிக்கிழமையன்று  என்னுடைய ரேஷன் கடைக்கு  பொருட்கள் வாங்க சென்றேன். துவரம் பருப்பு ( கனடியன் எல்லோ லெண்டில்)  பூசனம் பூத்து கட்டிகட்டியாக இருந்தது. அதனால் துவரம் பருப்பு வாங்கவில்லை. சர்க்கரை, உழுத்தம் பருப்பு போன்றவற்றை வாங்கினேன். வாங்கிய பொருளுக்கு பில் கிளார்க் பில் பில் கொடுத்தார். அதை வாங்கி வைத்துக்கொண்டு எடைபோடுபவர் பொருளை கொடுத்தார். பொருள் வாங்கிய நமக்கு பில் தரவேண்டுமல்லவா? தரவில்லை.

சென்னையை பொறுத்த வரை நியாய விலை கடைகளில் விற்கப்படும் தரம் அளவு பற்றி புகார் செய்ய சம்பந்தப்பட்ட மண்டலத்தின் சிவில் சப்ளை இலாகாவின் உதவி ஆணையர் அல்லது சிவில் சப்ளை கார்ப்பொரேஷனின் வடக்கு பிராந்திய முது நிலை மேலாளருக்கு புகார் செய்ய வேண்டும்.  தரமற்ற பொருளை சிவில் சப்ளை கார்ப்போரேஷன் சப்ளை செய்திருப்பதால் முது நிலை பிராந்திய மேலாளருக்கு உடனடியாக மின்னஞ்சலில் புகார் அனுப்பினேன்.

பொதுவாக பொருள் தரமற்று இருக்கிறது என புகார் வந்தால், மேற்படி பொருள் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு கடைக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியை அங்கு அனுப்பி தரத்தை பரிசோதிக்க வேண்டும். தரம் சரியில்லை என்றால் அப்பொருளை  கிடங்கிற்கு அனுப்பி மாற்றாக தரமுள்ள பொருளை கடைக்கு அனுப்ப வேண்டும். அப்பொருளை விநியோகத்திற்கு அனுப்பிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட  நடவடிக்கை விபரத்தை புகார் அனுப்பியவருக்கு தெரியப்படுத்தவேண்டும். ஆனால் என்ன நடந்தது?  அதற்கு முன் நான் அவருக்கு அனுப்பிய புகாரை படித்து பாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை கிளிக் செய்து பின் பெரிதாக்கி படிக்கவும்.




No comments:

Post a Comment